Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனது கனவை முன்கூட்டியே நனவாக்கிய மிஸ்கின் சாருக்கு "நன்றி”-விஷால்

Advertiesment
எனது கனவை முன்கூட்டியே நனவாக்கிய மிஸ்கின் சாருக்கு

J.Durai

, திங்கள், 18 மார்ச் 2024 (08:01 IST)
ஹீரோவாக என்னுடைய பயணம்25 வருடங்களுக்கு பிறகு இன்னொரு அத்தியாயம் துவங்குகிறது. என்னுடைய கனவு, ஆசை, வாழக்கையில் நான் என்னவாக இருக்கப்போகிறேன் என்கிற என்னுடைய முதல் எண்ணம் எல்லாமே நிஜமாகி இருக்கிறது. 
 
ஆம்.., எனது திரையுலக பயணத்தில் ஒரு அறிமுக இயக்குநராக அதிக சவாலான புதிய பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன், 
 
அந்தவகையில் தற்போது  நான் முதன்முதலாக இயக்கும் படத்திற்காக  லண்டன், அசர்பைஜான் மற்றும் மால்டாஆகிய இடங்களுக்கு கிளம்புகிறோம். #துப்பறிவாளன்2 & #டிடெக்டிவ்2. 
 
விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றாலும் என் தந்தை  ஜி.கே ரெட்டி மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் சார் சொன்னதுபோல கடுமையான உழைப்பு ஒருபோதும் வீணாகாது.
 
எதுவந்தாலும் பரவயில்லை என உங்கள் கனவுகளை விடாமுயற்சியுடன் தொடரும்போது ஒருநாள் அது நிஜமாக மாறும். 
 
இந்த நேரத்தில் எனது தந்தைக்கு நன்றி கூறி கொள்கிறேன். அதே போல் எனது குரு ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சாருக்கும் நன்றி சொல்லி கொள்கிறேன். டைரக்டராக உங்கள் பேரை காப்பாத்துவேன். 
 
ஒரு நடிகர் என்கிற இந்த அடையாளத்தை தந்த அனைவருக்கும் நன்றி. #துப்பறிவாளன்2 வுக்கும் ஒரு இயக்குநராகவும் உங்களது ஆதரவு தொடரும் என நம்புகிறேன்.. 
 
எனது கனவை முன்கூட்டியே நனவாக்கிய மிஸ்கின் சாருக்கு நன்றி. கவலைப்டாதீர்கள்.. நிஜ வாழ்விலோ அல்லது சினிமா வாழக்கையிலோ நான் யாருடைய குழந்தையையும் ஒருபோதும் கைவிடமாட்டேன்.
 
அதேபோல் உங்கள் குழந்தையான துப்பறிவாளன் 2-வை தத்தடுத்த நான், அதை  உங்கள் இலக்கை எட்டும் விதமாக செய்வேன் சார்.
கடவுளின் ஆசீர்வாதம்.. இப்போது வேலைக்கு கிளம்புகிறேன்.
நன்றி!
 
-நடிகர் விஷால்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் இசை கோர்ப்பு அப்பாவின் புகழ் சேர்ப்பு' - இசையமைப்பாளர் தஷிரெங்கராஜ்!