Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா" பாட்டுக்கு இப்போதும் நன்றி'' - விக்ரமை பாராட்டிய பிரபலம்

Advertiesment
, புதன், 19 ஜூலை 2023 (20:38 IST)
தமிழ் சினிமாவில்  நடிகர் விக்ரம்  நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு ரிலீஸான படம் சாமி. இப்படத்தை இயக்குநர் ஹரி இயக்கியிருந்தார்.  ரூ. 5 கோடியில் உருவான இப்படம் ரூ.48 கோடி வசூல் குவித்துச் சாதனை படைத்தது.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.

விக்ரம் போலீஸாகவும் அவருக்கு ஜோடியாக திரிஷாவும் இருவரும் சிறந்த  நடிப்பை கொடுத்திருந்தனர்.  இப்படத்தில் இடம்பெற்ற கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, இல்லை ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கிலாமா என்ற பாடல் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானது.

இப்பாடலுக்கு சர்ச்சைகள் எழுந்தாலும், இப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. இந்த நிலையில், இப்பாடலை பாடலாசிரியரு மக்கள் நீதி மையம்  நிர்வாகியுமான  சினேகன் நினைவுகூர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், நம்ம விக்ரமோடு எதிர்பாராத ஒரு விமான பயணம்.

20 ஆண்டுகளுக்கு முன் எழுதிய "கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா" பாட்டுக்கு இப்போதும் நன்றி சொல்கிறார்.

என்றும் மாறாத நட்பு
இளமை குறையாதப் பேச்சு
அடர்ந்து வளர்ந்த திறமை
அழகாய் சிரிக்கும் குழந்தை ''என்று பாராட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமா 'ஸ்டண்ட் மாஸ்டர்' கனல் கண்ணனுக்கு நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன்