.குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய சோனுசூட் !

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (23:51 IST)
கடந்த ஆண்டு கொரொனா கால ஊரடங்கின்போது, வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வர விமான உதவி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் பேருந்து வசதி, தொழிலாளர்களுக்கு உதவி, விவசாயிகளுக்கு டிராக்டர், மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் எனத் தொடர்ந்து உதவி செய்யும் நடிகர் சோனு சூட்டை கடவுள் என்று அவரது ரசிகர்களும் மக்களும் வணங்கி வருகின்றனர்.

அவரது சமூக சேவைக்கு ஐநா விருது வழங்கிக் கவுரவித்துள்ளது,. அத்துடன் இந்தியாவில் புகழ்பெற்ற நடிகர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த தம்பதிக்கு  பிறக்கும்போதே உடல் நலக் கோளாறுடன் குழந்தை பிறந்தது. குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்கு நடிகர் சோனு சூட் உதவி செய்தார். இதனையடுத்து, அந்தத் தம்பதி தங்களின் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய சோனுசூட்டின் பெயரை தமது குழந்தைக்குச் சூட்டி நன்றியை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சிப் படத்துக்குப் பிறகு அடுத்த பட வேலைகளைத் தொடங்கிய மகிழ் திருமேனி- ஹீரோ இவரா?

ஹீரோக்கள் வலுவானப் பெண் கதாபாத்திரங்களை விரும்புவதில்லை…. ஆண்ட்ரியா ஆதங்கம்!

ரி ரிலீஸில் புதிய சாதனைப் படைத்த ‘பாகுபலி தி எபிக்’!

காவ்யா மாறனுடன் அமெரிக்காவில் உலாவந்த அனிருத்… புகையும் வதந்தி!

ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலக காரணம்: பரபரப்பு தகவல்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments