Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல இடங்களில் நடக்கும் தங்கலான் படத்தின் டீசர் ரிலீஸ் விழா!

பல இடங்களில் நடக்கும் தங்கலான் படத்தின் டீசர் ரிலீஸ் விழா!
, வெள்ளி, 27 அக்டோபர் 2023 (07:40 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

ஷுட்டிங் மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதலில் நடந்தது. அதன் பின்னர் கே ஜி எஃப்-ல் பெரும்பகுதி ஷூட்டிங் நடந்து முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தை ஆஸ்கர் மற்றும் கேன்ஸ் உள்ளிட்ட திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக படத் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி தங்கலான் படத்தின் டீசர் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.  மேலும் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி ஐதராபாத் பெங்களூர் மற்றும் மும்பை ஆகிய நகரங்களிலும் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துருவ நட்சத்திரம் படத்தின் மீது இவ்வளவு கோடி ரூபாய் கடன் உள்ளதா?