Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தங்கலான் படம் இத்தனை மொழிகளில் ரிலீஸ் ஆகிறதா? தயாரிப்பாளர் கொடுத்த பதில்!

தங்கலான் படம் இத்தனை மொழிகளில் ரிலீஸ் ஆகிறதா? தயாரிப்பாளர் கொடுத்த பதில்!
, புதன், 22 மார்ச் 2023 (08:21 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஷுட்டிங் மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதலில் நடந்தது. இப்போது கோலார் தங்கவயலில் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகரான டேனியல் கால்டகிரன் நடிப்பதை படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. இது சம்மந்தமான அறிவிப்பு போஸ்டரை வெளியிட இணையத்தில் கவனம் பெற்றது.

இந்நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா “தங்கலான் தமிழ் படமோ இந்திய படமோ அல்ல. உலகப்படம். மிகச்சிறப்பாக உருவாகி வருகிறது. எத்தனை மொழிகளில் முடியுமோ அத்தனை மொழிகளில் இந்த படத்தை டப் செய்ய உள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்துக்கு பைனான்ஸ் செய்யும் பிரபல ஓடிடி!