நாளை மறுநாள் முதல் வருகிறான் சூர்யாவின் 'தண்டல்காரன்'

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (18:31 IST)
சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி நடித்த 'என்.ஜி.கே' திரைப்படம் நீண்ட நாட்களாக உருவாகி வரும் நிலையில் ஒரு வழியாக சமீபத்தில் இந்த படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், இந்த படம் வரும் மே 31ஆம் தேதி ரிலீஸாகும் என்றும் அறிவிக்கப்பட்டது
 
இந்த நிலையில் ஏப்ரல் 12ஆம் தேதி இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனை இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது டுவிட்டரில் உறுதி செய்திருந்தார்
 
இந்த நிலையில் தற்போது இந்த சிங்கிள் பாடல் தொடங்கும் வார்த்தையை தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பாடல் 'தண்டல்காரன்' என்ற வார்த்தையில் தொடங்குகிறதாம். தண்டல்காரன் என்றாலே அநியாய வட்டி வாங்குபவன் என்ற அர்த்தம் தரும் நிலையில் இந்த பாடலில் வட்டியின் கொடுமை குறித்து கூறப்பட்டுள்ளதா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
 
இயக்குனர் செல்வராகவன் இயக்கியுள்ள இந்த படத்தில் சூர்யாவுடன் ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி என இரண்டு முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படம் ஒரு அரசியல் அதிரடி படம் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments