Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவரை கண்டதும் ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்கும் தாமரை - இது கிராமத்து ரொமனாஸ் மாமே!

Advertiesment
கணவரை கண்டதும் ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்கும் தாமரை - இது கிராமத்து ரொமனாஸ் மாமே!
, வெள்ளி, 24 டிசம்பர் 2021 (12:57 IST)
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இந்த வாரம் முழுக்க ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வந்து பிக்பாஸ் சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில், ராஜு, அக்ஷரா , சிபி நிரூப், பாவினி பிரியங்கா உள்ளிட்டோரை தொடர்ந்து இன்று தாமரையின் இளைய மகன் பிக்பாஸ் வீட்டில் வந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தான். அதையடுத்து இரண்டாவது ப்ரோமோவில் அவரது கணவர் வந்துள்ளார். 
 
தெரு கூத்து நாடக கலைஞரான தாமரை திருமணம் செய்துக்கொண்டு இரண்டு மகன்கள் உள்ளனர். இதற்கிடையில் நாடகத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவதால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் தாமரை. அதனால் அவரது மூத்த மகனுக்கு தாமரையின் மீது கோபம்  இருப்பதாக இந்நிகழ்ச்சியில் கூறியிருந்தார். 
 
இந்நிலையில் தாமரையின் இளைய மகனை தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோவில் அவரது கணவர் வந்து தாமரை எப்படி விளையாடுகிறார் என்பதை கூறினார். அதோடு கோபத்தை அடக்க சொல்லி அறிவுரை கூறினார். பின்னர் மனைவிக்கு மல்லிகைப்பூ சூடி அழகு பார்த்தார். இந்த அழகிய கிராமத்து ரொமான்ஸ் அனைவரையும் கவர்ந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் வீட்டில் தாமரையின் மகன் - கட்டியணைத்து பாசம் பொழிந்த வீடியோ!