விஜய்யின் ‘கோட்’ படத்தின் இறுதி வசூல் இதுதான்: அர்ச்சனா கல்பாத்தி அறிவிப்பு..!

Siva
புதன், 9 அக்டோபர் 2024 (21:04 IST)
தளபதி விஜய் நடித்த "கோட்" திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியானது. வெளியான நாள் முதல் இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வசூல் தகவல்களைப் பற்றி படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தொடர்ந்து பகிர்ந்து வந்தார் என்பது நாம் அறிந்ததே.

இதற்கிடையில், ரஜினிகாந்த் நடிப்பில் "வேட்டையன்" திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. இதன் எதிரொலியாக, சில திரையரங்குகளில் இன்னும் ஓடிக்கொண்டிருந்த "கோட்" படத்தை இன்று முழுமையாக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படவுள்ளது.

அதே நேரத்தில், அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாவது, "கோட்" திரைப்படம் உலகம் முழுவதும் 455 கோடி ரூபாய் வசூல் செய்துவிட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அவர் இதற்கான போஸ்டரையும் வெளியிட்டார், இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்றுடன் "கோட்" திரைப்படத்தின் திரையரங்குகளில் நிறுத்தப்படுவதால், அதன் இறுதி வசூல் 455 கோடி என்று அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. மேலும், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் உட்பட இதுவரை படத்தின் மொத்த வருமானம் 700 கோடி ரூபாயை எட்டியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments