Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'தளபதி 69’ படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோ.. சூப்பர் அறிவிப்பு..!

'தளபதி 69’ படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோ.. சூப்பர் அறிவிப்பு..!

Mahendran

, வியாழன், 3 அக்டோபர் 2024 (17:29 IST)
தளபதி விஜய் நடிக்க இருக்கும் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் கடந்த இரண்டு நாட்களாக இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஏற்கனவே இந்த படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பாஜு, கௌதம் மேனன், பிரியாமணி உள்ளிட்டோர் இணைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் நடிகர் நரேன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரேன் ஏற்கனவே பல படங்களில் ஹீரோவாகவும், சில படங்களில் குணசித்திரம் மற்றும் வில்லன் கேரக்டரில் நடித்துள்ள நிலையில், தற்போது தளபதி 69 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி 69 படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கே.வி.என். ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகும் இந்த படம், விஜய்யின்  கடைசி படம் என்றும் கூறப்படுகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போக்சோ சட்டத்தில் கைதான ஜானி மாஸ்டருக்கு ஜாமீன்.. தேசிய விருது காரணமா?