மைக் மோகனுடன் மோதும் விஜய்… தளபதி 68 படத்தின் மாஸான ஸ்டண்ட் காட்சி படமாக்கல்!

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (07:06 IST)
லியோ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை  வெங்கட் பிரபு இயக்க  உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த மாதம் முன்னர் இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட நிலையில் இப்போது ஆக்‌ஷன் காட்சியைப் படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். இந்த ஆக்‌ஷன் காட்சியில் விஜய் மற்றும் நடிகர் மோகன் ஆகியோர் மோதுவது போல படமாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ வெளியாக இன்னும் ஒரு ஆண்டு ஆகுமா? என்ன காரணம்?

2வது நாளே திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்ட தனுஷின் 'இட்லி கடை' . 'காந்தாரா' காரணமா?

கரூர் சம்பவம் எதிரொலி.. ஜனநாயகன் படத்தில் ஏற்பட்ட பெரிய மாற்றம்..!

சிம்பு ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க..! - கலைப்புலி தாணு வெளியிட்ட அசத்தல் அப்டேட்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments