Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தளபதி 68 படத்தின் பூஜையில் கலந்துகொண்ட பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

தளபதி 68 படத்தின் பூஜையில் கலந்துகொண்ட பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
, செவ்வாய், 3 அக்டோபர் 2023 (07:01 IST)
பிகில் படத்துக்குப் பிறகு விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை  வெங்கட் பிரபு இயக்க  உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர். இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் இன்று நேற்று படத்தின் பூஜை நடந்த நிலையில் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தில் நடிப்பதாக சொல்லப்பட்ட பிரபுதேவா, பிரசாந்த், மீனாட்சி சௌத்ரி, சினேகா மற்றும் லைலா ஆகியோர் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் தான் கலந்துகொண்டதை தன்னுடைய முகநூல் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லியோ படத்தின் கதையை இணையத்தில் கசியவிட்ட நபர்கள்! ஷாக் ஆன ரசிகர்கள்!