Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்லீ - தளபதி இணையும் 63 வேற லெவல்ல இருக்கும் - தயாரிப்பாளர் உறுதி

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (17:32 IST)
சர்கார் படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்து இயக்குனர் அட்லியுடன் இணைந்து தன்னுடைய 63வது படத்தில் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தளபதி ரசிகர்களுக்கு இனிப்பூட்டும் ஒரு செய்தி, சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் மீண்டும் இயக்குனர் அட்லியுடன் இணைந்து தன்னுடைய 63வது படத்தில் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அது என்னவென்றால் தளபதி-63 வது படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று காலை துவங்கியது. இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியாகியது.   
 
இளம் இயக்குனர் அட்லீ தெறி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை தந்தவர் அடுத்த படைப்பில் தளபதியை எப்படிப்பட்ட கேரக்டரில் காண்பிக்க போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது நடைபெற்ற பிரஸ் மீட்டில் தயாரிப்பாளர் கல்பதி.எஸ்.அகோரம் அவர்கள் படக்குழு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் குறித்து வெளியிட்டார். 
 
படத்தின் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு , கலை இயக்குனராக முத்துராஜ் தங்கவேல், எடிட்டராக ரூபன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக் என அறிவித்திருக்கிறார். 
 
தளபதி விஜய் மற்றும் அட்லீ  கூட்டணியில் உருவாகும் இந்தப்படம்  பக்கா மாஸாக இருக்கும் என்று கூறிய அவர் தளபதி 63 படம் பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனி வருடத்துக்கு இரண்டு படங்கள் வரும்… ரசிகர்களுக்கு சூர்யா நம்பிக்கை!

விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?... வெளியான தகவல்!

போலீஸ் அனுமதிக்காத போதும் ஏன் தியேட்டர் விசிட்?... அல்லு அர்ஜுன் அளித்த விளக்கம்!

சார்பட்டா 2 ஷூட்டிங் எப்போது தொடங்கும்?... ஆர்யா அப்டேட்!

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments