Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்க்கு 2 ஆண்டு சிறை? தளபதிக்கு கேரளாவில் சிக்கல்!

Advertiesment
விஜய்க்கு 2 ஆண்டு சிறை? தளபதிக்கு கேரளாவில் சிக்கல்!
, புதன், 14 நவம்பர் 2018 (16:50 IST)
நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான சர்கார் திரைப்படம் தமிழகத்தில் கடும் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், தற்போது கேரளாவில் விஜய்க்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
 
சர்கார் படத்தின் முதல் போஸ்டர் வெளியான போது அதனை எதிர்த்து விமர்சனங்கள் வந்தது. அதாவது, அதில் விஜய் புகைப்பிடிப்பது தவறான ஒன்று என விமர்சிக்கப்பட்டது. மேலும் சமூக வலைத்தளங்களில் இருந்து இந்த புகைப்படத்தை நீக்க வேண்டும் என கோரிக்கைகளும் எழுந்தன. 
 
இந்நிலையில், படத்திலும் புகைப்பிடிப்பது போன்று அதிக காட்சிகள் வருவதால் ராமதாஸ் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், கேரள மாநிலம் திருச்சூரில் விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
திருச்சூர் மாவட்ட சுகாதாரத்துறையின் புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவாகியுள்ளது. இதில், நடிகர் விஜய் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், சர்கார் திரைப்பட விநியோக நிறுவனமான கோட்டயம் சயூஜியம் சினி ரிலீஸ், சன் பிக்சர்ஸ், திருச்சூர் ராம்தாஸ் திரையரங்க உரிமையாளர் ஆகியோர் அடுத்தடுத்த குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 
 
சிகரெட் மற்றும் புகையிலை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் விஜய் மற்றும் அடுத்தடுத்த குற்றவாளிகளுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு ஆணியும் புடுங்க முடியாது - சிம்பு ஆவேசம்