Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது.. 19 மாவட்ட மாணவர்களுக்கு விருது வழங்குகிறார் விஜய்..!

Advertiesment
Vijay Speech

Siva

, புதன், 3 ஜூலை 2024 (07:48 IST)
தளபதி விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவை நடத்தினார் என்பதும் அந்த விழாவில் கலந்து கொண்ட மாணவர் மாணவர்கள் திருப்தியுடன் தளபதி விஜய் கையில் பாராட்டு பத்திரம் மற்றும் பரிசு பொருட்களை பெற்று சென்றனர் என்பதும் தெரிந்தது.

மேலும் இந்த விழாவில் அவர் பேசிய போது மாணவ மாணவிகளுக்கு பல அறிவுரை கொடுத்தார் என்பதும் குறிப்பாக நீங்கள் எந்த துறையில் விருப்பம் கொள்கிறீர்களோ அந்த துறையில் நீங்கள் பிரபலமாகுங்கள் என்று கூறியவர் தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற இருக்கும் நிலையில் திருவான்மியூரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு அதிகாலையில் விஜய் வந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

இன்று விஜய் 19 மாவட்ட மாணவ மாணவிகளுக்கு விருது வழங்குகிறார் என்றும் 725 மாணவர்கள் உள்பட 3500 பேர் இந்த விழாவில் பங்கேற்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்றும் மாணவர்கள் பெற்றோரை பேருந்துகள் மூலம் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அழைத்து வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இன்றைய விழாவில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் விஜய் என்ன பேச போகிறார் என்பதை பார்க்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோட் படத்தின் VFX பணிகளுக்காக அமெரிக்காவில் முகாமிட்ட வெங்கட்பிரபு...!