Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தளபதி 66 சாட்டிலைட் உரிமையைத் தட்டி தூக்கிய முன்னணி நிறுவனம்!

தளபதி 66 சாட்டிலைட் உரிமையைத் தட்டி தூக்கிய முன்னணி நிறுவனம்!
, புதன், 13 அக்டோபர் 2021 (16:10 IST)
விஜய் நடிக்கும் அடுத்த படத்தை வம்சி இயக்க உள்ளார். அதற்கான வேலைகள் இப்போது நடந்து வருகின்றன.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

விஜய்யுடன் தில் ராஜூ மற்றும் வம்சி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள படக்குழுவினர் தளபதி 66 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது படத்தின் வேலைகளில் ஈடுபட்டுள்ள வம்சி  வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகர் நானியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

இன்னும் பூஜை கூட போடப்படாத இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் சுமார் 50 கோடி ரூபாய்க்கு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளுக்கும் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை விஜய் படங்களிலேயே இதுதான் அதிக தொகைக்கு விலைபோன படம் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிக்டாக் படத்தின் டீசரை இணையத்தில் தேடும் ரசிகர்கள்… ஏன் தெரியுமா?