Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்யின் ‘தளபதி 66’ 2ஆம் கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்

thalapathi
, செவ்வாய், 31 மே 2022 (19:54 IST)
தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 66 என்ற படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் வரும் ஜூலை 2ம் தேதி முதல் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் இந்த படத்திற்காக செட் போடப்பட்டு உள்ளதாகவும், அந்த செட்டில் படப்பிடிப்பு நடைபெறும் என தெரிகிறது
 
முதல் கட்டமாக விஜய் ராஷ்மிகா சம்பந்தப்பட்ட பாடல் காட்சி ஒன்றும் அதனை அடுத்து விஜய் சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கும் காட்சியை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் 
 
விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார் பிரபு உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் தமன் இசையமைத்து வரும் இந்த படத்தை வம்சி இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயம் ரவியின் அடுத்த படத்தை இயக்குவது இந்த அதிரடி இயக்குனரா?