Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 65 படத்துல ஹீரோயின் இவங்களா? – படக்குழு பேச்சுவார்த்தை

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (10:55 IST)
நடிகர் விஜய் நடிக்க உள்ள அவரது 65வது படத்திற்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய உள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படம் ஜனவரியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அவரது அடுத்த படத்திற்கான பணிகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளன.

தற்போது ‘தளபதி 65’ என்று அழைக்கப்படும் இந்த படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்ப்பு டிசம்பர் 10ல் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக எந்த நடிகையை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாம். மாஸ்டர் படத்தில் இதுவரை விஜய்யுடன் நடித்திராத மாளவிகா மோகனனை எடுத்திருப்பது போல, இந்த புதிய படத்திலும் விஜய்யுடன் இதுவரை நடிக்காத நடிகை ஒருவரை எடுக்க உள்ளார்களாம்.

சினிமாவட்டாரத்தில் நடிகை பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க பேசி வருவதாக பேசிக் கொள்ளப்படுகிறது. தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்தி என பிஸியாக இருந்தாலும் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தற்போது பிரபாஸுடன் ராதே ஷ்யாம் படப்பிடிப்பில் பூஜா ஹெக்டே பிஸியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments