Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'தளபதி 65’ படத்தின் முதல் பணி தொடங்கியது: வைரலாகும் புகைப்படம்!

'தளபதி 65’ படத்தின் முதல் பணி தொடங்கியது: வைரலாகும் புகைப்படம்!
, புதன், 10 பிப்ரவரி 2021 (21:03 IST)
'தளபதி 65’ படத்தின் முதல் பணி தொடங்கியது
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவரது அடுத்த படமான தளபதி 65 திரைப்படத்தை நெல்சன் இயக்கப் போவதாகவும் அனிருத் இசையமைக்க போவதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கப் போவதாகவும் வெளிவந்த அறிவிப்பை பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பணி தற்போது தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தின் போட்டோஷூட் இன்று நடைபெற்றதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்த போட்டோஷூட்டில் விஜய் உள்பட ஒருசிலர் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
மேலும் இயக்குனர் நெல்சன் சன் நிறுவனத்தின் ஊழியர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீயசக்தி தி.மு.கவை வீழ்த்துவதிலேயே முழு கவனம் - டி.டி.வி. தினகரன்