தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 65. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியாவில் நடைபெற்றது என்பதும் அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் படக்குழுவினர் சென்னை திரும்பினர் என்பதும் தெரிந்ததே
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	இந்த நிலையில் தளபதி 65 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் உள்ள பிரம்மாண்டமான ஸ்டூடியோ ஒன்றில் மால் செட் போடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
									
										
			        							
								
																	
	 
	வெளிநாட்டிலுள்ள மால் ஒன்றின் செட்டை அச்சு அசலாக தற்போது போடப்படும் பணி நடைபெற்று வருவதாகவும் இந்த செட்டில் தான் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் தகவல்கள் இறங்கியுள்ளன 
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	தற்போது செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் இந்த மால் செட்டில் தான் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இதில் விஜய், பூஜா உள்பட பலர் நடிக்க வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.