Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’தளபதி 65’ பட இயக்குனர்களின் பட்டியலில் திடீரென இணைந்த புதிய இயக்குநர்

’தளபதி 65’ பட இயக்குனர்களின் பட்டியலில் திடீரென இணைந்த புதிய இயக்குநர்
, வெள்ளி, 31 ஜனவரி 2020 (21:37 IST)
விஜய் நடிக்க உள்ள ’தளபதி 65’ திரைப்படத்தின் இயக்குனர் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பாண்டியராஜ், அட்லி, மோகன்ராஜா , மகிழ்திருமேனி, வெற்றிமாறன், சுதாகொங்காரா உள்ளிட்ட பல இயக்குனர்கள் இந்த பட்டியலில் இருந்த நிலையில் சமீபத்தில் கோமாளி பட இயக்குனர் பிரதீப்பும் இணைந்தார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக ’இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமாரும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யை நேரில் சந்தித்து இரவிக்குமார் ஒரு கதையை கூறியதாகவும் அந்த கதை விஜய்க்கு பிடித்து விட்டதால் அவரும் தற்போது ’தளபதி 65’ பட இயக்குனர்களின் பட்டியலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் ‘இன்று நேற்று நாளை’ படத்தை இன்னும் ஒரு மாதத்திற்குள் அவர் முடித்து விடுவார் என்றும் அதன் பின்னர் விஜய் வாய்ப்பு கொடுத்தால் ‘தளபதி 65’ படத்தில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வலிமை பட தயாரிப்பாளருக்கு திடீரென கிடைத்த 30 கோடி ரூபாய்: படக்குழு மகிழ்ச்சி