Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘தளபதி 64’ அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்

‘தளபதி 64’ அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்
, செவ்வாய், 26 நவம்பர் 2019 (21:57 IST)
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக டெல்லியில் நடைபெற்று வருகிறது 
 
இந்த படப்பிடிப்பில் பாடல் காட்சிகள், வசன காட்சிகள் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் ஆகியவை படமாக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லி படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இதனை அடுத்து ஒரு சில நாட்கள் மட்டுமே ஓய்வெடுக்கும் படக்குழுவினர் டிசம்பர் முதல் வாரத்தில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ’தளபதி 64’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற இருப்பதாகவும் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நடைபெற உள்ள இந்த படப்பிடிப்பின்போது இடைவெளி எதுவும் இன்றி ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் வரும் ஏப்ரலில் வெளியிட இந்த படம் விறுவிறுப்பாக படமாக்கப்பட இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 
 
விஜய், மாளவிகா மேனன், விஜய் சேதுபதி அந்தோணி வர்கீஸ், சாந்தனு, சஞ்சீவி, ரம்யா உள்பட பலர் நடித்து வரும் இந்த  படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் மிஸ் செய்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு