Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'தெறி'யை விட ஐந்து நாட்கள் முந்துகிறது 'தளபதி 61'

'தெறி'யை விட ஐந்து நாட்கள் முந்துகிறது 'தளபதி 61'
, வெள்ளி, 26 மே 2017 (23:35 IST)
இளையதளபதி விஜய் மற்றும் அட்லி முதன்முதலாக இணைந்த 'தெறி' திரைப்படம் நல்ல வசூலை பெற்று சூப்பர்ஹிட் ஆகியதை அடுத்து தற்போது மீண்டும் இதே ஜோடி இணைந்து 'தளபதி 61' படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வருகிறது



 


இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு சரியாக 142 நாட்கள் ஆகும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் 'தெறி' திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 147 நாட்கள் கழித்து தான் அந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது. எனவே 'தெறி'யை விட 'தளபதி 61' திரைப்படம் ஐந்து நாட்களுக்கு முன்பே ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் இருக்கேன், பயப்படாதீங்க ரஜினி: ஆறுதல் சொன்ன நக்மா