Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் இருக்கேன், பயப்படாதீங்க ரஜினி: ஆறுதல் சொன்ன நக்மா

நான் இருக்கேன், பயப்படாதீங்க ரஜினி: ஆறுதல் சொன்ன நக்மா
, வெள்ளி, 26 மே 2017 (22:19 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர முடிவு செய்துவிட்டது 100% உண்மை என்றே தெரிகிறது. இப்போது தெரிய வேண்டிய ஒரே விஷயம், அவர் தனிக்கட்சி ஆரம்பிக்கவுள்ளாரா? அல்லது ஏதாவது ஒரு கட்சியில் இணையவுள்ளாரா? என்பதுதான்.



 


ரஜினி தனிக்கட்சிதான் ஆரம்பிப்பார் என்றே பலர் கருத்து கூறி வரும் நிலையில் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து அவருடன் பாட்ஷா' படத்தில் நடித்த நடிகை நக்மா இன்று செய்தியாளர்களிடம் கருத்து கூறியுள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து அவர்தான் முடிவு எடுக்க வேண்டும். அதே நேரத்தில் ரஜினி தனிக்கட்சி தொடங்குவாரா? அல்லது ஏதாவது ஒரு கட்சியில் இணைவாரா? என்பதையும் அவர்தான் முடிவு எடுக்க வேண்டும். ஒருவேளை அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பப்பட்டால் நான் அவருக்கு தேவையான உதவியை செய்ய தயாராக இருக்கின்றேன்' என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் ஆகியோர் ரஜினிக்கு நீண்ட காலமாக நண்பர்களாக இருக்கும் நிலையில் ரஜினிக்கு நக்மா உதவி தேவைப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினிக்கு அழைப்பு விடுக்கவில்லை - அமித்ஷா அந்தர் பல்டி