Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதாவின் முதல்வர் வாழ்க்கை… தலைவி 2 ஆம் பாகம் உருவாக வாய்ப்பு!

Advertiesment
ஜெயலலிதாவின் முதல்வர் வாழ்க்கை… தலைவி 2 ஆம் பாகம் உருவாக வாய்ப்பு!
, புதன், 22 செப்டம்பர் 2021 (15:59 IST)
தலைவி படம் ஜெயலலிதா சினிமா நடிகையாக இருந்து தமிழகத்தின் முதல்வராக வருவது வரை படமாக்கப்பட்டது.

பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’தலைவி’. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இந்த படம் கடந்த மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாரானது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் இந்த படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை. இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி இந்தியா முழுவதும் தலைவி திரைப்படம் ரிலீஸானது.

இந்த படம் விமர்சன ரீதியாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதாவது பரவாயில்லை வசூலிலும் மிக மோசமாக உள்ளதாம். ஆனால் டிஜிட்டல் மற்றும் ஓடிடி ஆகியவற்றின் மூலமாக போட்ட தொகையை எடுத்து விட்டதாக தயாரிப்பாளர் ரஜத் அரோரா தெரிவித்திருந்தார். இந்நிலையில் தலைவி படத்தின் இரண்டாம்  பாகம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் பாகத்தில் ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சரானதற்கு பின்னர் நடக்கும் கதைக்களத்தை சொல்லும் படமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்துடன் மோதும் சூர்யா?