தெலுங்கு சினிமா நடிகர்களுக்கு உதவும் விதமாக சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி எடுத்த முன்னெடுப்பு 6 கோடி ரூபாய் திரட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் பீதியால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தொழில்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு முன்னணி நடிகர்கள் உதவி செய்ய வேண்டும் என ஆங்காங்கே குரல்கள் எழுந்துள்ளன. தமிழில் பெப்சி என்ற அமைப்பு முன்னணி நடிகர்களிடம் இதுபோல நிவாரணம் திரட்டியுள்ளது. அந்த தொகை இப்போது ஒரு கோடி ரூபாய் அளவுக்கு நெருங்கியுள்ளது.
ஆனால் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தொழிலாளர்களுக்காக நிதியுதவி அளிக்க ஒரு ட்ரஸ்ட்டை உருவாக்கி அனைவரையும் நிதியுதவி அளிக்க சொல்லி முன்னெடுத்தார். இந்நிலையில் அங்கே இதுவரை 6 கோடி ரூபாய் வரை நிதி இந்த ட்ரஸ்ட்டுக்கு வந்து சேர்ந்துள்ளது. இந்நிலையில் சிரஞ்சீவியின் இந்த செயலுக்குப் பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.