GOAT படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. KVN புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது. மேலும் படத் தயாரிப்பு நிறுவனம் அந்த படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இது பற்றி பேசியுள்ள நடிகர் கணேஷ் “விஜய் சார் பகவந்த் கேசரி படத்தை ஐந்து முறை பார்த்துள்ளார். பின்னர் இயக்குனர் அனில் ரவிபுடியை அழைத்து அந்த படத்தை ரீமேக் செய்யலாம் எனக் கேட்டுள்ளார். ஆனால் அவரோ எனக்கு ரீமேக் படங்கள் செய்வதில் உடன்பாடு இல்லை என சொல்லிவிட்டார். விஜய் படத்தை இயக்க இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் இவர் வந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்” எனக் கூறியுள்ளார்.