தெலுங்கு சினிமாவில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் முழு ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு எதுவும் நடக்காது எனவும் சொல்லப்படுகிறது.
சமீபத்தில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் புறநகர் பகுதியில் உள்ள திரையரங்குகளுக்கு டிக்கெட் விற்பனை பலமடங்கு அதிகமாக்கப்பட்டது. இதனால் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சம்பளம் ஆகியவற்றை குறைக்க சொல்லியும், டிக்கெட் விலையைக் குறைக்கவும் கோரி ஆகஸ்ட் 1 ஆம் தேதி வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
இதனால் அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருந்த பல தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் விஜய்யின் வாரிசு, ரஜினியின் ஜெயிலர் மற்றும் ஷங்கர் ராம்சரண் திரைப்படம் என பல படங்களின் ஷூட்டிங் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.