டாஸ்மாக் வழக்கில் அதிரடி மாற்றம் – வேறு அமர்வு… நாளை விசாரணை!

Webdunia
புதன், 13 மே 2020 (16:42 IST)
தமிழகத்தில் டாஸ்மாக்கை திறப்பது தொடர்பான வழக்கு3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மே7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளிலும் சமூக விலகலை கடைபிடிக்கவில்லை என்பது சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்களில் இருந்து தெரிய வந்தது. இநத நிலையில் கடந்த 8 ஆம் தேதி  மாலை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூடவேண்டும் என்றும் ஆன்லைனில் மட்டுமே மதுக்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் மீறப்பட்டதால் இந்த அதிரடி உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை  எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இது சம்மந்தமான வழக்கு இப்போது மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் பி.என் பிரகாஷ் ஆகியோர் கொண்ட மூன்று பேர் அமர்வு டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை நாளை காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments