Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருப்பன் படத்தில் குடும்ப குத்துவிளக்காய் நடித்த நடிகையா இது..! புகைப்படத்தை பாருங்களேன்!

Advertiesment
கருப்பன் படத்தில் குடும்ப குத்துவிளக்காய் நடித்த நடிகையா இது..!  புகைப்படத்தை பாருங்களேன்!
, திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (17:40 IST)
தமிழ் சினிமாக்களில் ஆரம்ப கால கட்டங்ககளில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் அளவான கவர்ச்சியை காண்பித்து நடித்த நடிகைகள் பலரும் அடுத்தடுத்த படங்களில் நடித்து ஆள் அடையாளமின்றி கவர்ச்சிக்கு தாராளம் காண்பித்து கிளாமர் நடிகையாக வலம் வர தொடங்கிவிடுவார்கள். 


 
அந்த லிஸ்லிட்டில் தற்போது விஜய் சேதுபதியுடன் கருப்பன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்கக்ளை கொள்ளைக்கொண்டவர் நடிகை  தான்யா ரவிச்சந்திரன். இவர் பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. 
 
கருப்பன் படத்திற்கு முன்பாக தமிழில் ‘பலே வெல்லயத்தேவா’, ‘பிரிந்தாவனம் ‘ போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்ற தான்யாவுக்கு கருப்பன் படம் தான் ஒரு நல்ல அடையாளத்தை பெற்று தந்தது. அந்த படத்தில் குடும்ப குத்துவிளக்காக, அடக்கமான மனைவியாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். 
 
குடும்ப பெண் வேடங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கிக்கொண்ட தான்யா தற்போது மாடர்ன் உடைகளில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வாய் பிளக்க செய்துவிட்டார். இருந்தாலும் தன்யாவின் தீவிர ரசிகர்கள் மாடர்ன் உடையில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என புகழ்ந்து போட்டோக்களை சமூகவலைத்தளங்கில் ஷேர் செய்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

" வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு தமிழனை சாவடிக்கும் " இது தான் மதுக்கு நடந்த அநீதி!