ஒரு பாடலுக்கு நடனமாட 5 கோடி சம்பளம் கேட்டாரா தமன்னா?... அவரே அளித்த விளக்கம்!

Webdunia
திங்கள், 22 மே 2023 (12:26 IST)
தமிழ் சினிமாவில் ரவிகிருஷ்ணா நடித்த கேடி படத்தின் மூலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார். ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.  

சமீபகாலமாக தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தமன்னாவுக்கு ‘நவம்பர் ஸ்டோரிஸ்’ வெப் சீரிஸ் மறுவாழ்வு கொடுத்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது விஜய் 68 படத்திலும் அவர்தான் நாயகி என கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி தமன்னா 5 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக ஒரு தகவல் பரவியது. இதற்கு விளக்கம் அளித்துள்ள தமன்னா “ இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகளைப் படிக்கும் போது வருத்தமளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷாலின் மகுடம் படத்துக்கு வந்த சிக்கல்… ஷூட்டிங்கை நிறுத்தியதா இயக்குனர் சங்கம்?

23 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்… வெளியான அறிவிப்பு!

இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்… ‘லோகா’ ஓடிடியில் ரிலீஸ்!

ஜனவரியில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘கருப்பு’… திடீர் திட்டம்!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் க்யூட் பிக்ஸ்…!

அடுத்த கட்டுரையில்