Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளைக்கு நீங்க ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: தமிழ்ப் படம் 2 ஆடியோ ரிலீஸ்!

Webdunia
வியாழன், 28 ஜூன் 2018 (17:57 IST)
‘தமிழ்ப் படம் 2’ படத்தின் ஆடியோ, நாளை ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

 
‘மிர்ச்சி’ சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தமிழ்ப் படம் 2’. ஏற்கெனவே ரிலீஸான ‘தமிழ்ப் படம்’ என்ற படத்தின் தொடர்ச்சியாக இது உருவாகியுள்ளது. ‘போலீஸ் அத்தியாயம்’ என இந்தப் படத்துக்கு கேப்ஷன் கொடுத்துள்ளனர்.
 
சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ள இந்தப் படத்தை, ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தயாரித்துள்ளார். ஜூலை மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நான் யாரும் இல்ல’ வீடியோ பாடல் ரிலீஸானது.
 
இந்நிலையில், நாளை படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. ‘எங்கள் இசை உங்களை நோக்கி. ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது’ என விளம்பரம் செய்துள்ளனர் படக்குழுவினர்.
 
இந்தப் படத்தில் சிவா ஜோடியாக திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன் இருவரும் நடித்துள்ளனர். சதீஷ், மனோபாலா, சந்தான பாரதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகை கஸ்தூரி ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அனிருத் மேஜிக் ஆன் தி வே... விரைவில் விடாமுயற்சி முதல் சிங்கிள்!

தக் லைஃப் படத்தில் இருந்து ஜெயம் ரவி வெளியேற மணிரத்னத்தின் கஞ்சத் தனம்தான் காரணமா?

இந்த வயசுலயே இவ்ளோ க்ளாமர் தேவையா? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அனிகா!

யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ பட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

கருணாஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ஆதார்' படம் மலையாளத்தில் உருவாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments