Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2026-ல் தமிழக முதல்வரே: விஜய்க்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஒட்டியுள்ள போஸ்டர்!

Advertiesment
2026-ல் தமிழக முதல்வரே: விஜய்க்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஒட்டியுள்ள போஸ்டர்!
, செவ்வாய், 20 ஜூன் 2023 (15:14 IST)
நடிகர் விஜய் அரசியலில் நுழைவதற்கான அடித்தளத்தை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக 234 தொகுதியிலும் 10,12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து சந்தித்து மாணவர்களை கெளவுரவப்படுத்தி அவருக்கு நடிகர் விஜய் நிதி உதவி வழங்கினார். 
 
இது விஜய் மக்கள் இயக்க நீர்வாகிகளை குஷீபடுத்த ரசிகர்கள் விஜய் அரசியல் பிரவேசம் உறுதி  செய்து தற்போது விதவிதமான போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். வருகின்ற ஜூன்.22 தேதி நடிகர் விஜய் தனது 49வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். 
 
இந்நிலையில் மதுரை தெற்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் " 2026  தமிழக முதல்வரே! எங்கள் தலைமுறையை தலைநிமிர்த்த தலைவரே", நீங்கள் வாழ்க பல்லாண்டு எனவும், தமிழ்நாட்டு தலைமை செயலக கட்டத்தின் முன் நடிகர் விஜய் நடந்து வருவது போலவும் "நாளை தமிழகத்தின் காத்திருக்கிறது அண்ணா", எனவும் போஸ்டர் அடித்து மதுரை மாநகரின் பல்வேறு பகுதியில் ஒட்டியுள்ளனர். இது தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளவட்டத்தை மயக்க நயன்தாரா பயன்படுத்தும் யுக்தி இது தான்!