Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமீபத்தில் மறைந்த நடிகை ஜமூனாவின் பயோபிக்.. நடிக்கப் போவது இந்த நடிகையா?

Advertiesment
சமீபத்தில் மறைந்த நடிகை ஜமூனாவின் பயோபிக்.. நடிக்கப் போவது இந்த நடிகையா?
, செவ்வாய், 31 ஜனவரி 2023 (09:08 IST)
எம்ஜிஆர், சிவாஜி, கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஜமுனா சில தினங்களுக்கு முன்னர் காலமானார்.

மேடை நாடகத்தில் இருந்து திரைக்கு வந்த ஜமுனா பல தமிழ் தெலுங்கு உள்பட பழமொழிகளில் நடித்தவர் என்பதும் பிலிம் பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கமலஹாசன் நடித்த தூங்காதே தம்பி தூங்காதே என்ற படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருப்பார் என்பதும் எம்ஜிஆர் சிவாஜிக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலிலும் இறங்கி வெற்றிகரமாக செயல்பட்டார் ஜமுனா.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இந்நிலையில் அவரின் பயோபிக் படம் உருவாக உள்ளதாகவும், அதை தமிழ் இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாகவும் தமன்னா கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமாவை விட்டே போய்விடலாம் என நினைத்தேன்… பதான் வெற்றிக்குப் பிறகு ஷாருக் உருக்கம்!