Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட தமன்னா.. பின்னணி என்ன?

vinoth
வெள்ளி, 18 அக்டோபர் 2024 (09:26 IST)
தமன்னா, ‘சாந்த் சா ரோஷன் செஹரா’ என்ற இந்திப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.  அதன் பின்னர் அவர் தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.

ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இப்போது பாலிவுட் பட வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வர ஆரம்பித்துள்ளன. பாலிவுட்டில் அடுத்தடுத்து ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகியவற்றில் நடித்துள்ளார். இந்த இரு படங்களிலும் அவர் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் நடித்திருந்தார். இதையடுத்து பாலிவுட் படங்களில் இப்போது அவர் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது தமன்னா ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஐபிஎல் தொடரை சட்டவிரோதமாக Fairplay என்ற செயலி ஒளிபரப்பியது. இது சம்மந்தமாக அந்நிறுவனம் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் Fairplay நிறுவனத்தின் விளம்பரத் தூதரான தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த செயலியில் ஐபிஎல் போட்டியைப் பார்க்க ஊக்குவித்ததாக தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் அல்லு அர்ஜூனனுக்கு 14 நாட்கள் சிறை.. நீதிபதி அதிரடி உத்தரவு..!

ரசிகரை கொன்ற வழக்கில் தர்ஷனுக்கு ஜாமீன்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் க்யூட் போட்டோஷூட்!

அல்லு அர்ஜுனின் கைதுக்குப் பின்னால் அரசியல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments