Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தில் நடிகை தமன்னா?

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தில் நடிகை தமன்னா?
, வியாழன், 13 அக்டோபர் 2022 (09:46 IST)
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் உருவாக்கத்தில் உள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது.

இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா the Rule உருவாக உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் புஷ்பா 2 கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாம். புஷ்பா சர்வதேச சந்தையை பிடிக்க முயலும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சொல்லுவதாக இரண்டாம் பாகம் உருவாகும் என சொல்லப்படுகிறது. இதற்காக ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் படப்பிடிப்புகள் நடத்த உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் தமன்னா நடனமாட உள்ளதாக சொல்லப்படுகிறது. முதல் பாகத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலில் சமந்தாவின் கவர்ச்சி நடனம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“என் பயோபிக்கில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்…” பிரபல கிரிக்கெட் வீரர் தகவல்!