Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னை அழைத்து விருது தராமல் அவமதித்தார்கள் - நடிகை தமன்னா!

என்னை அழைத்து விருது தராமல் அவமதித்தார்கள் - நடிகை தமன்னா!
, செவ்வாய், 28 ஜூலை 2020 (09:57 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியான தமன்னா இந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் 2006ம் ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அதையடுத்து இரண்டாவது படமான "கல்லுரி" படத்தில் ஹிட் நடிகையாக பேசப்பட்டார்.

தொடர்ந்து அஜித் , விஜய் , தனுஷ் , கார்த்தி , சூர்யா உள்ளிட்ட பல உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக  நடித்து சூப்பர் ஹிட் நடிகையாக வலம் வந்த தமன்னா பாகுபலி படத்திற்கு பிறகு உலகம் முழுக்க பெரும் பிரபலமானார். இந்நிலையில் நடிகை தமன்னா பாலிவுட்டில் தனக்கு நடந்த அநியாயம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இளம் நடிகர் சுஷாந்த் சிங் மறைவிற்கு பிறகு பாலிவுட்டில் நடக்கும் வாரிசு நடிகர்களின் அராஜகம் பற்றி பலரும் கூறி வருகின்றனர். அந்தவகையில் ஏ. ஆர் ரஹ்மான், ரசூல் பூக்குட்டி தொடர்ந்து தற்ப்போது நடிகை தமன்னா, "
“ பாலிவுட்டில் விருதுகள் கொடுப்பதில் எனக்கு பல தடவை அநியாயம் நடந்துள்ளது. அதை நிச்சயம் சொல்லித்தான் ஆக வேண்டும். நிறைய தடவை விருதுகளுக்கு என்னுடைய பெயர் பரிந்துரைக்கபட்டும்  எனக்கு கொடுக்காமல் அசிங்கப்படுத்தினார்கள். திறமையான நடிகர் நடிகைகளை இப்படி ஒதுக்கமுடியாது

ஓவ்வொரு கலைஞனுக்கும் ரசிகர்கள் ஆதரவு தான் முக்கியம். அவர்கள் எவ்வளவு நாள் ஆதரிக்கிறார்களோ அவ்வளவு நாள் நிலைத்து இருக்கலாம். அப்படித்தான்  ரசிகர்கள் ஆதரவு எனது படங்களுக்கு இருந்தது. அதனால் தான் என்னால் சினிமாவில் இவ்வளவு நாள் நிலைத்திருக்கமுடிந்தது.எனவே ரசிகர்கள் ஆதரவை விட விருதுகள் ஒன்றும் பெரியது கிடையாது. என்றார் தமன்னா.  
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகநூல் Live -ல் தற்கொலை முயற்சி - நடிகையை விரைந்து காப்பாற்றிய சுதீப்!