Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் பிரபுவின் டாணாக்காரனை வாங்கிய டிஸ்னி + ஹாட் ஸ்டார்!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (12:43 IST)
விக்ரம் பிரபுவின் டாணாக்காரன் படத்தை டிஸ்னி + ஹாட் ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது. 

 
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும் இளைய திலகம் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு கடந்த 2012 ஆம் ஆண்டு கும்கி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் ’இவன் வேற மாதிரி’, ’அரிமா நம்பி’, ’சிகரம் தொடு’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த அவர் தற்போது ’புலிக்குட்டி பாண்டியன்’ ’பொன்னியின் செல்வன்’ ’பாயுமொளி நீ எனக்கு ’ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் விக்ரம் பிரபு நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ‘டாணாக்காரன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அதன் டீசர் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. டீசரில் போலிஸ் பயிற்சி பள்ளிகளில் நடக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விக்ரம் பிரபு மோதும் படமாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. 
 
இந்த படம் தனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என விக்ரம் பிரபு பெரிதும் நம்பியிருந்தாராம். ஆனால் இப்போது அந்த படத்தை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளாராம். இந்நிலையில் போச்சுவார்த்தை முடிந்து டாணாக்காரனை டிஸ்னி + ஹாட் ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது. விரைவில் பட வெளியீட்டை அறிவிக்க உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளருக்கு செலவு சுமை கொடுக்காமல் சம்பளம் வாங்கும் சல்மான் கான்.. தமிழ் நடிகர்களும் பின்பற்றுவார்களா?

பீரியட் படமாக இருந்தும் ‘பராசக்தி’ படத்தை வித்தியாசமாக படமாக்கும் படக்குழு!

சம்பளத்தை சொல்லி சன் பிக்சர்ஸையே ஓடவிட்ட அட்லி… அல்லு அர்ஜுன் படத்தில் நடந்த மாற்றம்!

சிம்பு 49 படம் தொடங்குவதில் தாமதம்… இதுதான் காரணமா?

வடசென்னை 2’ படத்தில் தனுஷ், வெற்றி மாறன் தான்.. தயாரிப்பாளர் மட்டும் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments