Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று மாலை பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் T ராஜேந்தர்… வெளியான தகவல்

Advertiesment
இன்று மாலை பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் T ராஜேந்தர்… வெளியான தகவல்
, செவ்வாய், 14 ஜூன் 2022 (09:22 IST)
தமிழ் சினிமாவின் மூத்தக் கலைஞர்களில் ஒருவர் T ராஜேந்தர். இயக்கம், ஒளிப்பதிவு, இசை நடிப்பு, தயாரிப்பு, விநியோகம் என பல துறைகளில் வெற்றியாளராக பவனி வந்தவர் டி ராஜேந்தர். இவரின் மகனான சிம்பு தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் டி ராஜேந்தர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். அவருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார்.

இன்று மாலை அமெரிக்காவுக்கு செல்ல இருக்கும் நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று மாலை அவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு கோல்டன் விசா! – அரபு அமீரகம் அளித்த கௌரவம்!