Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதுவரை 20,000 கோடி விபிஎப் கட்டியுள்ளோம் – டி ராஜேந்தர் ஆதங்கம்!

Advertiesment
இதுவரை 20,000 கோடி விபிஎப் கட்டியுள்ளோம் – டி ராஜேந்தர் ஆதங்கம்!
, புதன், 11 நவம்பர் 2020 (18:32 IST)
தமிழ் சினிமா உலகில் இப்போது வி பி எஃப் கட்டணம் என்ற சொல்தான் அதிகளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே விபிஎஃப் கட்டணத்தை செலுத்துவது குறித்து எழுந்துள்ள பிரச்சினை முடிவடையாத நிலையில் உள்ளது.

விபிஎஃப் கட்டணங்களை திரையரங்குகளே செலுத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் கூறி வருகிறது. இதற்கு ஒப்புக்கொண்டுள்ள தற்போது பேசியுள்ள திரையரங்க உரிமையாளர்கள் “விபிஎஃப் கட்டணங்களை நாங்கள் ஏற்க தயார். ஆனால் பட வசூலில் 50 சதவீதத்தை திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர்கள் தர வேண்டும்” என நிபந்தனை விதித்துள்ளனர். இந்த வாக்குவாதத்தால் தீபாவளிக்குள் படங்கள் வெளியாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இது சம்மந்தமான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற குழப்பமே எழுந்துள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட இருக்கும் டி ராஜேந்தர் ‘இதுவரை 20000 கோடிக்கும் மேல் வி பி எப் கட்டணமாக தயாரிப்பாளர்கள் கட்டியுள்ளனர்’ என்ற அதிர்ச்சித் தகவலைக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகரின் மகள் பெயரில் போலிக் கணக்கு… புகாரை அடுத்து நீக்கம்!