Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"ஸ்வீட்டி நாட்டி கிரேஸி" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

J.Durai

, திங்கள், 7 அக்டோபர் 2024 (09:17 IST)
Arun Visualz என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V. M.R.ரமேஷ், R. அருண் ohஇருவரும் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் G. ராஜசேகர்  இயக்கத்தில் , த்ரிகுண் மற்றும் ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, சுந்தரா டிராவல்ஸ் ராதா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்ஸ் காமெடி திரைப்படம்,  ஸ்வீட்டி நாட்டி கிரேஸி. 
 
தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு,  நடைபெற்றது. 
 
இந்நிகழ்வில் 
இயக்குநர் G. ராஜசேகர் பேசியதாவது…...
 
Arun Visualz என்ற புதிய பட நிறுவனத்தின்  V. M.R.ரமேஷ், R. அருண் ஆகியோரிடம் நான் கதை சொல்லப் போன போது, இளைஞர்கள் ரசிக்கும் கதை கேட்டார்கள். இந்த கதை சொன்னவுடன் மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டார்கள். த்ரிகுனை நாயகனாகப் போடலாம் என அணுகினேன், அவருக்கும் கதை பிடித்திருந்தது. ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா,  சுந்தரா டிராவல்ஸ் ராதா   என ஒரு நல்ல  குழு கிடைத்துள்ளது. இந்தக் கால ரசிகர்கள் எல்லோரும் ரசிக்கும்படியான ஒரு அருமையான படமாக இப்படம் இருக்கும். படம் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தமிழ் தெலுங்கு, ஹிந்தி உட்படப் பல மொழி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த  பெண் ஒளிப்பதிவாளர் C. விஜய ஸ்ரீ M. என் கதையை ஒப்புக்கொண்டு,  அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும்,  அனைவருக்கும் நன்றி. 
 
சுந்தரா டிராவல்ஸ் ராதா பேசியதாவது…..
 
இப்படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் சார், அருண் சார் எல்லோருக்கும் நன்றி. இரண்டு கதாநாயகிகளும் எனக்கு மிகவும் ஒத்துழைப்பு தந்தார்கள். என் முதல் படத் தயாரிப்பாளர் தங்கராஜ் சார் தான்,  இங்கு நிற்க காரணம் அவருக்கு நன்றி. தம்பி ராமையா சாருடன் நடித்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. சுந்தரா டிராவல்ஸ் படம் போல இந்தப்படமும் காமெடியாக இருக்கும். ஹியூமர் இப்போது நாம் நிறைய மிஸ் செய்கிறோம், அதை இந்தப்படத்தில் மீண்டும் ரசிப்பீர்கள். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். இயக்குநர் மிக அழகாக படத்தை எடுத்துள்ளார். விஜய் ஶ்ரீ மேடம் எங்கள் எல்லோரையும் உற்சாகப்படுத்துவார், அவருக்கு நன்றி என்றார்.
 
நடன இயக்குநர் ராதிகா பேசியதாவது…..
 
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு என் நன்றி. இறுதிக்கட்டத்தில் தான் நான் இணைந்தேன். ராஜசேகர் சாருடன் முன்னர் வேலை பார்த்திருக்கிறேன். அதை ஞாபகம் வைத்து என்னை அழைத்ததற்கு நன்றி. இயக்குநர் கடுமையாக வேலை வாங்குவார், இரண்டு பாடல்  செய்துள்ளேன், மிக அழகாக வந்துள்ளது. ஒளிப்பதிவாளர் விஜய ஸ்ரீ மேடம் என் வேலையைப் பாதியாக்கிவிட்டார். ஹீரோ மிக அன்பானவர் கேரவனுக்கு போகாத ஹீரோ. இப்படம் ராதாவுக்கு இது நல்ல கம்பேக்காக இருக்கும். இனியா மிக அற்புதமான டான்ஸர். ஸ்ரீ ஜீத்தா கோஷ் துறுதுறுப்பானவர். படம் நன்றாக வந்துள்ளது. உங்கள் எல்லோரது ஆதரவையும் தாருங்கள் என்றார்.
 
நடிகை இனியா பேசியதாவது.....
 
இந்தப்படம் எனக்கு ஸ்பெஷல் மூவி, என் மூன்று  படங்கள் இந்த வாரம் வெளிவந்துள்ளது. தொடர்ந்து நல்ல விசயங்கள் நடப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் நந்தினி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளேன், நல்ல பாத்திரம். மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளோம், ஸ்வீட்டி நாட்டி கிரேஸி யார் யார் என படம் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு பெண் ஒளிப்பதிவாளர் பணியாற்றியது எங்களுக்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தது. அவருடன் இன்னும் நிறையப் படங்கள் செய்ய ஆசை. த்ரிகுன் முதலில் அவரை தெலுங்குப் பையன் என நினைத்தேன், ஆனால் அவர் கோயம்புத்தூர் பையன். அழகாக நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் படம் வருகிறது. எல்லோரும் விரும்பி வேலை பார்த்துள்ளோம். ராஜசேகர் சார் ஃபர்ஸ்ட் படம், செம்ம ஃபன்னாக படம் எடுத்துள்ளார். எல்லோருக்கும் பிடிக்கும்படி கலகலப்பாக இருக்கும்  நன்றி என்றார்.
 
நாயகன் த்ரிகுண் பேசியதாவது…....
 
ரொம்ப நாஸ்டாஜியாவாக இருக்கிறது. எனக்கு ஊர் கோயம்புத்தூர் தான், ஜர்னலிசம் படிச்சேன், பிரகாஷ் ராஜ் கண்ணில் பட்டு, இனிது இனிது படம் செய்தேன். காலேஜ் படிக்கும் போதே ஹீரோ ஆகிவிட்டேன். சமீபத்தில் மிஷ்கின் சார் இசையமைத்த டெவில் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. நான் தெலுங்கில் பல படங்கள் செய்திருந்தாலும் இங்கு பார்ப்பவர்கள் என்ன படம் செய்துள்ளாய் எனக் கேட்கும் போது, வருத்தமாக இருக்கும், அதனால் தமிழில் படம் செய்ய வேண்டும் என நினைத்தேன். அந்த நேரத்தில் தான் ராஜசேகர் சார் கதை சொன்னார். அவர் தயங்கி தயங்கி கதை சொன்னார், இப்போதைய கால கட்டத்தில் ஒன்று அழ வைக்க வேண்டும், இல்லை சிரிக்க வைக்க வேண்டும், இப்போது நான் சீரியஸ் படங்கள் தான் செய்து வருகிறேன், அதனால் கண்டிப்பாக இந்தப்படம் செய்யலாம் என சொன்னேன். இப்படத்திற்காக ஈசிஆரில் பாடல்  ஷீட் செய்தோம் அதே இடத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்துள்ளேன், இப்போது ஹீரோவாக நடித்தது மகிழ்ச்சி. இப்படத்தில் விஜய் ஶ்ரீ மேடம் செம்ம சூப்பராக வேலை பார்த்துள்ளார், அவருக்கு நன்றி. ராஜசேகர் சார் மிக கடினமான உழைப்பாளி, இப்படம் கண்டிப்பாகப் பேசப்படும் படமாக இருக்கும். எங்கள் படத்தில் மூன்று கதாநாயகிகள், அனுபவம் வாய்ந்தவர்கள் என்னுடன் இணைந்து நடித்ததற்கு நன்றி. இந்தப்படம் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் ஜாலியான படமாக இருக்கும் நன்றி என்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் எந்த போட்டியிலும் இல்லை… மெய்யழகன் சக்ஸஸ் மீட்டில் அரவிந்த்சுவாமி பேச்சு!