Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ஓடிடியில் வெளியானது சுழல் 2 வெப் சீரிஸ்!

vinoth
வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (14:42 IST)
கதிர், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்பட பலர் நடிப்பில் உருவான சூழல் அமேசான் பிரைம் வீடியோவில் 2022 ஆம் அனடு வெளியானது. இந்த தொடரை ‘விக்ரம் வேதா’ புகழ் புஷ்கர் & காயத்ரி எழுத, பிரம்மா மற்றும் அணுசரண் ஆகியோர் இயக்கி இருந்தனர்.

ஒரு சிறு நகரத்தில் காணாமல் போகும் பெண்ணை தேட துவங்கும்போது ஏற்படும் பயங்கரமான விளைவுகளை திரில்லராக உருவாக்கியுள்ளதாக சொல்லபடுகிறது. முன்னணிக் கலைஞர்கள் இருப்பதால் இந்த தொடர் கவனத்தை ஈர்த்த ஒன்றாக அமைந்துள்ளது. மொத்தம் 8 எபிசோட்களாக இந்த சீரிஸ் உருவாகி இருந்தது.

வெளியானது முதல் ரசிகர்களின் பரவலான பாராட்டுகளை இந்த சீரிஸ் பெற்ற இந்த சீரிஸின் இரண்டாவது சீசன் தற்போது வெளியாகியுள்ளது.. முதல் சீசனை போலவே இந்த சீசனும் ஒரு கோயில் திருவிழாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. முந்தைய சீசனில் நடந்த கொலைகளுக்குக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மேலும் சில கொலைகள் நடக்க அதன் முடிச்சை அவிழ்த்தனரா அல்லது இன்னும் தேடல் இன்னும் குழப்பமாகிக் கொண்டே போகிறதா என்பதுதான் இரண்டாவது சீசனாக உருவாகி உள்ளது. இந்நிலையில் இன்று முதல் இந்த சீரிஸ் அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments