Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் வெளியாகும் இரண்டு சுசீந்தரன் படங்களின் அறிவிப்பு!

ஒரே நாளில் வெளியாகும் இரண்டு சுசீந்தரன் படங்களின் அறிவிப்பு!
, வெள்ளி, 13 நவம்பர் 2020 (17:32 IST)
சுசீந்தரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது.

நடிகர் சிம்பு இப்போது சுசீந்தரன் இயக்கியுள்ள ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் இயக்குனர் சுசீந்தரன் ஜெய்யை வைத்து இரண்டு படங்களை இயக்கி முடித்துள்ளார். அதில் ஒரு படத்தில் மீனாட்சி நாயகியாக நடித்துள்ளார். சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் ப்ரின்ஸ், அருள்தாஸ், இயக்குநர் முக்தார் கான் உள்ளிட்ட பலர் ஜெய்யுடன் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நாளை இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு நடிகர் ஜெய்யே இசையமைத்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவல்துறை உங்கள் நண்பன் படத்தை ரிலீஸ் செய்யும் வெற்றிமாறன்! தயாரிப்பாளர் அறிவிப்பு!