Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யா-செல்வராகவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது....

சூர்யா-செல்வராகவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது....
, திங்கள், 5 மார்ச் 2018 (17:46 IST)
நடிகர் சூர்யா இயக்குனர் செல்வராகவனுடன் இணையும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

 
நடிகர் சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தார். அதன் பின் இயக்குனர் செல்வராகவனுடன் ஒரு புதிய படத்தில் அவர் இணைந்துள்ளார். இப்படத்தில் நடிகைகள் சாய் பல்லவி, ராகுல் பிரீத், பிரபு உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படம் சூர்யா நடிக்கும் 36வது படமாகும்.
webdunia

 
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என இப்படத்தின் இயக்குனர் செல்வராகவன் ஏற்கனவே கூறியிருந்தார். அதன்படி, சரியாக இன்று மாலை 5 மணிக்கு செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக்கை அவர் வெளியிட்டுள்ளார். இது சூர்யா ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனவருத்ததால் டுவிட்டரில் இருந்து வெளியேறிய நிவேதா பெத்துராஜ்