Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா விலகல்: இயக்குனர் பாலா அறிவிப்பு!

Advertiesment
vanangaan2
, ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (21:01 IST)
’வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா விலகல்: இயக்குனர் பாலா அறிவிப்பு!
’வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாக இயக்குனர் பாலா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ’வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த மாற்றங்களினால் இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமோ என்ற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. 
 
என் மீதும், இந்த கதையின் மீது முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது. 
 
எனவே ’வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒரு முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. ‘நந்தா’வில் நான் தான் பார்த்த சூர்யா, பிதாமகன் - இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி ’வணங்கான்’ பணிகள் தொடரும் 
 
இவ்வாறு பாலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''துணிவு'' படத்தில் அஜித்திற்கு பதிலாக வேறு நடிகர் நடித்தாரா?