Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னட இயக்குனரின் படத்தில் நடிக்கிறாரா சூர்யா?

vinoth
சனி, 20 ஜூலை 2024 (13:48 IST)
சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தி கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் அக்டோபர் 10 என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் முதல் பேன் இந்தியா படமாக கங்குவா ரிலீஸாகவுள்ளது.

கங்குவா படத்துக்குப் பிறகு சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 44’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா படத்தொகுப்பாளராக ஷஃபீக் முகமது அலியும், ஸ்டண்ட் இயக்குனராக கெச்சா காம்பக்தேயும், காஸ்ட்யூம் டிசைனராக ப்ரவீன் ராஜாவும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

இந்த படத்தை முடித்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி கன்னட இயக்குனர் நர்த்தன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவலின் உண்மைத் தன்மை என்னவென்பது பற்றி தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழை பட 25-வது நாள் கொண்டாட்டம் வெற்றி விழா!!

சூர்யா வின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி எப்போது? சூப்பர் அறிவிப்பு..!

தனுஷ் விவகாரத்தில் ஃபெப்சி அமைப்பு தலையீடு: தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.

’கோட்’ படத்தின் 13 நாள் வசூல்.. தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

என்னது ரூ.1000 கோடியா? ரூ.500 கோடி கூட வரல.! கோட் படத்தின் வசூல் இவ்வளவுதானா.?

அடுத்த கட்டுரையில்
Show comments