Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யா -சிறுத்தை சிவா இணையும் படத்தின் புதிய அப்டேட்

சூர்யா -சிறுத்தை சிவா இணையும் படத்தின்  புதிய அப்டேட்
, செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (18:55 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவரது அடுத்த படத்திற்கான சூட்டிங் செட் பிரமாண்டமான அளவில் தயாராகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தற்போது சன்பிக்சர்ஸ் தயாரிப்பில்  பாண்டியராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது.

இப்படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்திற்கான பணிகள் தொடங்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையே வெற்றிமாறன் – சூரி நடிப்பில் உருவாகிவரும் விடுதலை பட வேலைகள் தற்போது நடந்து வருவதால் இதற்கு முன்னதாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்  சூர்யா  ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணிகள் நிறைவடைந்த பின்னர் சூர்யா பட வேலைகளை சிவா தொடங்கவுள்ளார். இப்புதிய படத்திற்கான செட் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் தள்ளிப்போகும் வாடிவாசல்… காரணம் இதுதான்!