சூர்யா நடித்துவரும் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது என்பதும் தற்போது படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	இந்த படத்தின் வசன பகுதிகளில் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இன்னும் இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு மட்டுமே படமாக்கப்பட வேண்டிய நிலை இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
									
										
			        							
								
																	
	 
	ஒரு பாடலை சென்னையிலும் இன்னொரு பாடலை கோவாவிலும் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார்.