Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிப்பின் நாயகரே.. உதவும் நல் இதயமே! – ட்ரெண்டாகும் சூர்யா பர்த்டே

Advertiesment
நடிப்பின் நாயகரே.. உதவும் நல் இதயமே! – ட்ரெண்டாகும் சூர்யா பர்த்டே
, வியாழன், 23 ஜூலை 2020 (08:33 IST)
தமிழ் திரைப்பட நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று பிரபலமாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் திரைப்பட உலகில் அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர்களில் முக்கியமானவராக விளங்குபவர் சூர்யா. நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாலம் அகரம் பவுண்டேசன் மூலமாக மாணவர்கள் கல்விக்கு உதவுவது, சமூக சேவைகளில் பங்கெடுப்பது என சூர்யா செய்துவரும் சேவைகளால் பலருக்கு அவர் மீது மதிப்பும், மரியாதையும் உள்ளது.

இன்று (ஜூலை 23) நடிகர் சூர்யாவின் 45வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் அவரது ரசிகர்கள் இதை பிரபலமாக வெளியில் கொண்டாடுவது இயலாத காரியமாக உள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் காமன் டிபி வைப்பது, ஹேஷ்டேக் ட்ரெண்டிங் செய்வது போன்றவற்றின் மூலம் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இதனால் ட்விட்டரில் #Anna #NadippinNayagan போன்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.

அதேசமயம் சூர்யா நடித்து இன்னும் வெளிவராமல் உள்ள சூரரை போற்று படத்தை விரைவில் திரையரங்குகள் ரிலீஸ் செய்ய கோரிக்கை விடுத்து #SooraraiPotru என்ற ஹேஷ்டேகும் ட்ரெண்டாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது நம்ம லிஸ்டிலே இல்லையே.... வேறு ஒரு ஆணுடன் நெருக்கமாக வனிதா விஜயகுமார்!