அமேசான் ப்ரைமில் 80 கோடி ரூபாய் அள்ளிய சூர்யா! செம்ம ஸ்மார்ட்டுங்க நீங்க!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (16:44 IST)
தமிம்நாட்டில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு திரைப்படங்கள் ஓடிடியிலேயே வெளியாகி வருகின்றன. அந்த வகையில் முன்னதாக சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்த பொன்மகள் வந்தாள், சூரரை போற்று உள்ளிட்ட படங்கள் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது.

அதை தொடர்ந்து தற்போது சூர்யா நடித்து ரிலீஸுக்கு தயாராக உள்ள ஜெய்பீம் திரைப்படமும் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இது கூடவே 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவான ராமன் ஆண்டாளும், ராவணன் ஆண்டாளும் படமும் அமேசான் ஓடிடியிலேயே வெளியாக உள்ளது.

இந்த படங்கள் எல்லாம் மாதம் ஒன்று என அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளன. இந்நிலையில் இந்த நான்கு படங்களையும் 80 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளாராம் சூர்யா. இதில ஆச்சர்யம் என்னவென்றால் இதில் எந்த படத்தின் பட்ஜெட்டும் 10 கோடிக்கு மேல் இல்லையாம். இதன் மூலம் மிகப்பெரிய தொகையை லாபமாக பார்த்துள்ளாராம் சூர்யா. இந்த வருவாயின் மூலம் மேலும் 3 படங்களைத் தயாரிக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments