ஓடிடியில் மோதிக் கொள்ளும் சூர்யா, விஜய் சேதுபதி! – ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (11:30 IST)
கொரோனா காரணமாக திரையரங்குகள் செயல்படாத நிலையில் ஆன்லைனில் பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக பெரிய ஹீரோக்கள் இருவரின் படங்கள் ஒரே சமயத்தில் திரைக்கு வந்தால் எந்த படம் நன்றாக ஓடுகிறது என ரசிகர்களிடையே போட்டி ஏற்படும். ஆனால் தற்போது கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் பெரும்பாலான படங்கள் ஓடிடியில் வெளியாக தொடங்கியுள்ளன. இந்நிலையில் சூர்யாவின் சூரரை போற்று ஓடிடியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த “க\பெ ரணசிங்கம்” படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. ZEE Plex சேனலில் அக்டோபர் 2ல் வெளியாகும் க\பெ ரணசிங்கம் அதை தொடர்ந்து சில நாட்களில் ஜீ5 ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா மற்றும் விஜய் சேதுபதியின் படங்கள் இரண்டு நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து ஓடிடி மூலமாக வெளியாவது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருந்தாலும், எந்த படம் பெரும் வெற்றியடையும் என்று எதிர்பார்ப்பும் எழுந்துள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் ‘கைதி 2’ இல்லையா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments